தஞ்சாவூர், அக்- 21. தஞ்சை மாவட்டத்தில் காவல்துறையில் தங்களது இன்னுயிரை துச்சமாக எண்ணி பணியின் போது உயிர் நீத்த காவல் ஆளிநர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் தலைமையில் காவலர் வீர வணக்க நாளானது அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம், தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், அனைத்து உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர், ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் உயிர் நீத்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.