தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..
கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது..
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கோவை மாவட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா சங்கத்தின் தலைவர் அஜ்மீர் சாகுல் தலைமையில் கோவையில் நடைபெற்றது..
சாய்பாபா காலனியில் உள்ள கோவை ஸ்டார்ஸ் ஸ்டுடியோவில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக புத்தாடைகள் இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கினர்..
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட நடிகர் சங்க செயலாளர் ஜெயன் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
