தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட ரத்னா காலனி டு சண்முகபுரம் இணைக்கும் சாலை சுமர் 30 வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுவர் எழுப்பப்பட்டு இருந்தது சில வாரங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு சுவர் அகற்றப்பட்டது இதனை அடுத்து மீண்டும் சில நபர்கள் சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்
இதனால் பொதுமக்கள் சண்முகபுரம் பகுதியில் இருந்து வி.இ. ரோட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது இதனை அடுத்து சண்முகபுரத்தைச் சேர்ந்த கர்ணன் தலைமையில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் ஜெகனை சந்தித்து உடனடியாக ரத்னா காலனி ஆக்கிரமிப்பு அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்
அப்போது பொதுமக்களிடம் மேயர் ஜெகன் அரசு ஆவணங்களின் அடிப்படையில் சரி பார்க்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் உடனடியாக அதில் சாலைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொதுமக்களிடம் கூறினார்
