புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, சுல்தான்பேட்டை கிராமத்திற்கு உட்பட்ட முஹம்மதியா நகர், ராஜா நகர், குளம் முதல் அரசூர் சாலை சந்திப்பு வரை உள்ள மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் ரூபாய் ஒரு கோடியே 61 லட்சம் செலவில் புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை சாலைகள் மற்றும் கட்டிடங்கள் வடக்கு பிரிவு மூலம் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய தார் சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதில், பொதுப்பணித்துறை சாலைகள் மற்றும் கட்டிடங்கள் வடக்கு பிரிவு செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவிப் பொறியாளர் சீனுவாசராம், இளநிலைப் பொறியாளர் குலோத்துங்கன் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள், திமுக நிர்வாகிகள், வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.