தாராபுரம், ஊதியூர் அருகே கிராம அறிவுசார் மையத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

ஊதியூர் அருகே குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொழுமங்குளி ஊராட்சியில், கிராம அறிவுசார் மையம் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையடுத்து கொழுமங்குளி ஊராட்சியில் உள்ள கிராம அறிவுசார் மையக் கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.சந்திரசேகரன் பி.ஏ. பி பகிர்மான குழுத் தலைவர் குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சியின் மாவட்டத் தொழிலாளர் அணி அமைப்பாளர் மயில்சாமி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மணிவேல், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன். பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ். கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.