துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் நகர காங்கிரஸ் சார்பில்156வது காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜரின் 50வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. துறையூர் நகர காங்கிரஸ் சார்பில் அண்ணா சிலை முன்புறம் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா மற்றும் கர்ம வீரர் காமராஜரின் நினைவு நாள் (அக்-02) நிகழ்ச்சி நகர தலைவர் இராமநாதன் தலைமையில் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து தேச தந்தை மகாத்மா காந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இவ்விழாவில் வட்டார தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். மேலும் இதில் மாவட்ட செயலாளர் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் பெரியசாமி, நகர செயலாளர் திருமுருகன், கலியமூர்த்தி, கல்யாணசுந்தரம், சதீஷ்குமார், மற்றும் காங்கிரஸ் வட்டார நிர்வாகிகள் குமார், சௌந்தரராஜன், ராஜேந்திரன், சரவணபவன் சேகர் மற்றும் காங்கிரஸ் தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
வெ.நாகராஜு
திருச்சி மாவட்ட செய்தியாளர்
