எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற ஒலிலாயம் சித்தர் பீடத்தில் ராஜேந்திர சுவாமிகள் குருபூஜை விழா அமெரிக்கா ஹாங்காங் தைவான் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடம் அமைந்துள்ளது. சித்தர் பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் குருபூஜை விழாவை முன்னிட்டு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் ஸ்ரீ சிவசங்கர மஹேஸ்வர மற்றும் மஹேஸ்வரி சிறப்பு மகா யாக பூஜைகள் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஒளிலாயம் சித்தர் பீடத்தில 51 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 65 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.தொடர்ந்து பூர்ணாஹுதி நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து யாக பூஜையில் வைக்கப்பட்ட கடம் புறப்பாடாகி மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலயத்தை வலம் வந்து தியான லிங்கத்திர்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் அமெரிக்கா ஹாங்காங் தைவான் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் யாகத்தில் பங்கேற்று புனித நீர் கடன்களைச் சுமந்து சித்தர் பீடத்தை வலம் வந்து மனம் உருகி வழிபாடு மேற்கொண்டனர்.
