தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் செயல்படும் நாட்டு நல பணி திட்ட மாணவர்களின் சமூக பணியான ஆற்றங்கரை கறையா வண்ணம் ஆற்றங்கரையில் விதைகளை நடுகின்ற நிகழ்வினை தமிழக கல்வித்துறை கையில் எடுத்துள்ளது.

பணியின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் அமைந்துள்ள ச. மு. இ. மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம், தேசிய பசுமை படை , தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், ஜூனியர் ரெட் கிராஸ் சங்கம் ஆகிய பள்ளி இயக்கங்கள் ஒன்றாக இணைந்து 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை பதியம் செய்தார்கள்,

இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். முரளிதரன் தலைமை ஏற்க , பள்ளி உதவி தலைமை ஆசிரியர் என். துளசிரங்கன் மூத்த முதுகலை ஆசிரியர் வி. முருகபாண்டியன் ஆகியோர் முன்னிலையில், சீர்காழி கல்வி மாவட்ட ( டி. எல். ஓ.) நாட்டு நல பணித்திட்ட தொடர்பு அலுவலர் கே. விஜய் அமிர்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை விதை நடவு செய்கின்ற நிகழ்வினை கொடியை செய்து துவக்கி வைத்தார்கள்,