துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட பணிகளை முற்றாக புறக்கணித்து வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.உப்பிலியபுரம் மண்டல துணை வட்டாட்சியர் ராமு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தலைமை இடத்தில் துணைவற்ற வட்டாட்சியர் ஐயப்பன் துறையூர் மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமை நிலைய அளவியல் வெங்கடாசலம் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் உங்களின் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும், வருவாய்த் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு உடன் இயற்ற வேண்டும், பணியின் போது மரணம் அடையும் கிராம உதவியாளரின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களை வட்ட எல்லைக்குள் தங்கிப் பணிபுரிய தமிழ்நாடு அரசு அமைச்சு பணி விதிமுறைகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், ஜூலை 1ஆம் நாளை வருவாய் துறை தினமாக (பசலி ஆண்டின் தொடக்கம்) அனுசரித்து ஆணை அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
