துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சேனப்பநல்லூர், கலிங்கமுடையான்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு செப்டம்பர் 25ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
இம்முகாமில் வட்டாட்சியர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ரவிச்சந்திரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன் (மேற்கு), அண்ணாதுரை (மத்திய), முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேனப்பநல்லூர், கலிங்கமுடையான்பட்டி ஆகிய ஊராட்சியில் உள்ள பொது மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.இதில் 15 அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.
முகாமில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்ட வழங்கல் அலுவலர் முத்து,வருவாய் ஆய்வாளர் இளவரசி, ஆரம்ப சுகாதார அலுவலர் செந்தில்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோகிலா , ஊராட்சி செயலர்கள் மாலதி, சாமிவேலு, ராமர் மற்றும் சேனை பழனிசாமி,ரவி பெருமாள்,ஆனந், சிங்காரவேலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர்கள் சேனப்பநல்லூர் சங்கீதா,கலிங்கமுடையான் பட்டி பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
