தென்காசி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்ப்பட்ட நயினாரகம் ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளியம்மாள்புரம் கிராமம் இந்திரா காலனி முதல் தெருவில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அப்பகுதி மக்கள் சேரும் ககதியுமாக இருந்து வரும் அவலம்.தினமும் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த கழிவுநீர் கலந்த நீரில் தினமும் நீந்தி செல்கின்றனர்.
இதனால் அவ்வப்போது குழந்தைகள் முதியவர்கள் நோய் வாய் பட்டு அரசு மருத்துவமனையை நாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பலமுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவுன்சிலர் மட்டும் ஊராட்சி நிர்வாகத்திற்கு எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என இந்த பகுதி மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
