தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலை ஓர வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபாரம் செய்து கொள்ள மாநகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதன்படி சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சியிலிருந்து அடையாள அட்டை வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வங்கிக் கடன் வழங்கும் திட்டத்னத சில மாதங்களுக்கு முன்பு துவைக்கு வைத்தார்.
அதனை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் படிப்படியாக மாநகராட்சி ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வங்கிகள் மூலம் லோன் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து சாலை ஓர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் பல்வேறு வங்கிகள் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது முகாமில் பொதுமக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமை தாங்கினார் மாநகராட்சி சுகாதார நல அலுவலர் டாக்டர் சரோஜா முன்னிலை வகித்தார் சாலை ஓர வியாபாரிகளுக்கு அடையாள அட்டையை மாநகராட்சி மேயர் ஜெகன் வழங்கி பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் சாலை ஓர வியாபாரிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி துவக்கி வைத்தது ஆரம்பத்தில் 50 காடு தான் இருந்தது இப்போது9 997 வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டு லோன் வாங்கியுள்ளனர்.
முதலில் 6325 பேருக்கு இரண்டாவது3267 பேர் மூன்றாவது லோன் 406 பேர் 50 ஆயிரம் ரூபாய் லோன் பெற்றுள்ளன கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார் 1862 கார்டு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அன்று வழங்கினார் 6325 பேருக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட காடு போக 4463 காடு அடிக்கப்பட்டு வருகிறது விரைவில் அது வழங்கப்படும் மீன் வியாபாரி ஆக இருந்தாலும் சரி பூ வியாபாரி ஆக இருந்தாலும் சரி இந்த வருடம் இந்த லோன் வழங்கப்படுகிறது .
லோன் வழங்கப்பட்டு வரும் இந்த லோன் முகாம் இங்குஒரு வார காலம் தொடர்ந்து நடைபெறும் ராஜாஜி பூங்கா முன்பு எட்டையாபுரம் ரோடு பீச்ரோடு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலை ஓர வியாபாரிகளுக்கு கடைகள் வைக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது மாநகராட்சி அடுத்த தரத்துக்கு சென்றுள்ளது கேரினப அறவே ஒழிக்க வேண்டும் 80சதவீதம் கேரி பை ஒலிக்கப்பட்டு விட்டது வரும் சங்கத்தினர் மிகவும் சிரமப்படுவார்கள் முன்பெல்லாம் பார்த்தால் பேப்பரில் தான் பார்சல் மடித்து கொடுப்பார்கள் நீங்கள் வங்கியில் போய் கேட்டால் லோன் தர மாட்டார்கள் நாங்கள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் வங்கிஉங்களுக்கு லோன் வழங்கப்படுகிறது.
பத்தாயிரம் ரூபாய் லோனுக்கு 2500 ரூபாய் மானியம் உள்ளது சாலையோர வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ்நாடு அரசு சாலையோர வியாபாரிகள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கணக்கெடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பேசினார் மாநகராட்சி அதிகாரி காந்திமதி நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா. திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன். மாமன்ற உறுப்பினர் கனகராஜ் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன் போல் பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர். ஜேஸ் பார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
