அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜாமணி தலைமை தாங்கினார்.
செயலாளர் சகுந்தலா அனைவரையும் வரவேற்று பேசினார் பொருளாளர் ஜோதி முன்னிலை வகித்தார் ஒன்றிய பொறுப்பாளர்கள் உத்தரமேரி உஷா லதா கலைமணி சந்திரா விஜயா உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சிஐடியு நிர்வாகிகள் தலைவர் சகுந்தலா, செயலாளர் தோழர் துரைசாமி துணைத்தலைவர் சிற்றம்பலம் சந்தானம் ஆகியோர் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள் சுமார் 2 மணி நேரம் இந்த மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியர்கள் ஆக்கி ரூபாய் 26,000 சம்பளம் வழங்க வேண்டும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு குறைவான ஓய்வூதியம் ரூபாய் 9000 அகவிலை படியுடன் வழங்க வேண்டும் அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக சுமார் பத்து லட்சமும் உதவியாளருக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் சனிக்கிழமைகளில் வார விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது
