செங்குன்றம் செய்தியாளர்
ராஷ்டரசந்த் பரம் குருதேவ் ஸ்ரீநம்ரமுனி மகாராஜ் சாஹிப்ஸ் 55 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அர்ஹம் யுவா சேவாக் குழுவின் சார்பில், கண் பார்வையற்ற மாற்று திறனாளிகள் 108 பேர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் , மாதவரம் பகுதி நிர்வாகிகள் ஒன்றிணைந்து தலா 2100 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை அவர்கள் விருப்பம் போல் தேர்ந்தெடுத்து அதனை பெற்று செல்ல மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள ரிலையன்ஸ் ஸ்மார்ட் பஜாருக்கு அனைவரையும் வரவழைத்து அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி அமைப்பின் நிர்வாகிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருட்களை வாங்கி கொடுத்தனர். பொருட்களை பெற்றுச் சென்ற கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மகிழ்வுடன் அவர்களுக்கு நன்றி கூறி சென்றனர்.
