கோவை மாவட்ட தடகள சங்கம், இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை, எஸ்பிடி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து, 3வது ‘பல்ஸ் ஹார்டத்தான்’ போட்டி கோவையில் நடைபெற்றது. இளைஞர்களிடையே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 5 கி.மீ தூர விழிப்புணர்வு ஹார்டத்தான் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் சுமார் 1200 நபர்கள் கலந்து கொண்டார்கள் ராம்நகர் எஸ்பிடி மருத்துவமனையில் இருந்து தொடங்கிய ஹார்டத்தான் ராம் நகர், நேரு வீதி வழியாக, நஞ்சப்பா சாலை, எடிடி காலனி வழியாக பாலசுந்தரம் ரோடு அண்ணா சிலை அடைந்து மீண்டும் எ டி டி காலனி வழியாக நேரு ஸ்டேடியத்தில் நிறைவடைந்தது.
போட்டியை 4 பெட்டாலியன் டிஎஸ்பி செந்தில் குமார் மற்றும் காவல்துறை துணை ஆணையர் அசோக் குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையிலும், இதய ஆரோக்கியம் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலைமை விருந்தினராக ரோட்டரி சர்வதேச இயக்குநர் ஏ.கே.எஸ். முருகானந்தம், மாவட்ட ஆளுநர் செல்லா கே. ராகவேந்திரன், இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதய விழிப்புணர்வு அமர்வுகளை இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் சுப்புராஜா வழிநடத்தினார்.
ஹார்டத்தானில் பங்கேற்றவர்கள், முதலில் 1 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு, பின்னர் ஜாகிங் மற்றும் ஓட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்த நிவாரணத்திற்கான ஜூம்பா நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
நிகழ்வை குர்பீத் சிங், காட்வின், டாக்டர் சித்ரா மனோகர், நாகராஜன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
