இரா.மோகன்
மயிலாடுதுறை செய்தியாளர்
உலகப் புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய உண்டியல் என்னும் பணி நிறைவு. ரூபாய் 47 லட்சம் பணம், 500 கிராம் தங்கம், 750 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தகவல்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வருடத்தில் முழுவதும் 365 நாட்களும் ஹோமங்கள் மற்றும் வயது முதிர்ந்த தம்பதிகளுக்கு திருமண வைபவங்கள் யாகங்கள் பூஜைகள் நடைபெறும் ஒரே ஸ்தலமாகும். பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் உண்டியலில் தங்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 8 மாதத்தில் பக்தர்கள் அளித்த காணிக்கை உண்டியல்களில் உள்ள தொகை என்னும் பணி இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.பெண்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் என்னும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது உண்டியலில் இருந்து எடுக்கப்பட்ட தொகை பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டு அதிலிருந்து சல்லடையில் கொட்டப்பட்டு பணம் சில்லறை காசு என சலித்து தனித்தனியாக எடுக்கப்பட்டது.
இவற்றை நூற்றுக்கும் மேற்பட்டோர் தனித்தனியாக பிரித்து எடுத்தனர் இயந்திரம் கொண்டு பணம் என்னும் பணி நடைபெற்றது. மேலும் காணிக்கையில் வெளிநாட்டு பணம் மற்றும் தாலி உள்ளிட்ட தங்க நகை வெள்ளி நகைகள் இருந்தது அவையும் தனியாக பிரித்து எடுக்கப்பட்டது.
பின்னர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பத்திரமாக வைக்கப்பட்டு பின்னர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ரூபாய் 47 லட்சம்,500 கிராம் தங்கம், 750 கிராம் வெள்ளி பொருட்களை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
