கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத் தேவர் அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மையம் சார்பில் கமுதியில் (சாதி/சமய பேதமற்றது) எதிர்வரும் 21.09.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை (பொதுத் தமிழ்:100 பொது அறிவு :75 கணிதம்:25 மொத்தம்:200 வினாக்களுக்கு மாவட்ட அளவில் முழு மாதிரி தேர்வு நடைபெறும். இத்தேர்வில் கலந்து கொள்ளவிரும்பும் போட்டித்தேர்வாளர்கள் தங்களின் ஆளறிச்சான்றிதழ் நகலுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதலாம்..உடனடியாக OMR திருத்தப்பட்டு முதல் 3 இடங்களைப்பிடிப்பவர்களுக்கு சிறந்த வெகுமதி வழங்கப்படும் என தேவர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.