இந்திய பிரதமர் நரேந்திர மோடி-யினா 75-வது பிறந்த நாளை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தருமபுரி நகர பாஜக சார்பில், ஆறுமுகம் தலைமையில் நான்கு ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பிரதமரின் பிறந்த நாளை ஒட்டி 25 ஆட்டோக்களில் இன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்களுக்கு இலவச பயணம் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய 25 ஆட்டோக்களில் பாஜக கொடி கட்டி, இலவச பயணத்தை மாவட்ட தலைவர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தருமபுரி நான்கு ரோட்டில் இருந்து ஒட்டப்பட்டி வரை செல்லும் ஆட்டோ பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கணேசன் நகர பொதுச்செயலாளர் பிரபாகரன், ரவிசங்கர் மாவட்ட செயலாளர் மதியழகன் சசிகுமார் நகர நிர்வாகிகள் சக்திவேல், கவியரசன் பூவரசன், முரளி, சீனிவாசன், அண்ணாதுரை,மாதேஷ், பாஜக நிர்வாகிகள் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
