துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பச்சமலை ஏரிக்காடு வரை பேருந்து வசதியை அருண்நேரு எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார்.துறையூர் வட்ட சட்ட பணிகள் குழுவில் பச்சமலை ஏரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஜே கனகா என்பவர்,
துறையூரில் இருந்து பச்சமலைப்பகுதியில் கடைசி கிராமமாக இருக்கும் எங்கள் ஏரிக்காடு கிராமம் உட்பட எருமப்பட்டி, மருதை ஆகிய கிராமங்களுக்கும் அரசு பேருந்து வருவதில்லை என்றும் அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐந்து கிலோ மீட்டர் வரை நடந்தே சென்று பேருந்து ஏறி வருகிறோம்.

இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம். துறையூரில் இருந்து செம்புளிச்சான்பட்டி வரை இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளை மருதை, எருமப்பட்டி, ஏரிக்காடு வரை வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 28.08.2025 மனு அளிந்திருந்தார்.

அந்த மனுவின் அடிப்படையில் துறையூர் அரசு போக்குவரத்து கிளை மேலாளர், கண்ணனூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர், அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல மேலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் துறையூர் கிளை மேலாளர் 10-09-2025 அன்று ஆஜராகி ஒரு வார காலத்திற்குள் மருதை, எருமப்பட்டி கிராமங்கள் வழியாக ஏரிக்காடு வரை பேருந்து இயக்கப்படும் என எழுத்து பூர்வமாக தெரிவித்து இருந்தார்.மருதை, எருமப்பட்டி, ஏரிக்காடு கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதி ஆகிய சி.விஜய் கார்த்திக் அவர்களின் துரித நடவடிக்கைால் 15/09/2025 அன்று துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து பச்சமலையில் உள்ள செம்புளிச்சான்பட்டி கிராம வழியாக மருதை, எருமப்பட்டி, ஏரிக்காடு கிராமம் வரை பேருந்து நீடிக்கப்பட்டு,இந்த புதிய வழித்தடத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேரு கொடி அசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு சார்பு நீதிபதி நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி,ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன், அண்ணாதுரை, சிவ சரவணன்,முத்து செல்வன், ந.அசோகன்,நகர மன்ற தலைவர் இ.செல்வராணி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன் தாஸ், கலை இலக்கியப் பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், பொதுக்குழு கிட்டப்பா, மாவட்ட பிரதிநிதி மதியழகன், கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ் அழகன், நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், அம்மன் பாபு, ஸ்டுடியோ சசிகுமார், போக்குவரத்து கழக மேலாளர் ஜெயசந்திரன், தொமுச தலைவர் சுப்பையா, ராஜீ, மனோகரன்,கரிகாலி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்