கடலூர் மாநகர் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் இலவச கழிப்பறையிலிருந்து வெளியாகும் மலம் மற்றும் சிறுநீர் கழிவிகள் நேரடியாக லாரன்ஸ் ரோட்டில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கலக்கின்ற அவல நிலை,நாகம்மாள் கோயில் எதிரில் பேருந்துகள் திரும்பும் இடத்தில் புழுக்களும் மலமும் ரோட்டில் மிதக்கின்ற அவல நிலை


இதனால் பொது மக்களுக்கும் வணிகர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை, கண்டுகொள்ளாத மாநகராட்சி..பாதாள சாக்கடை உடைத்து எடுத்து மலம், கழிவுநீர் சாலைகளில் பாய்ந்து கடலூர் மாநகரம் முழுவதும் துர்நாற்றம் வீசும் கொடுமை, பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறை ஒப்பந்ததாரரின் லாப வேட்டைக்கு ஆதரவாக இலவச கழிப்பறையை இழுத்து மூடிய மாநகராட்சி நிர்வாகம்.

இப்படிப்பட்ட அசுத்தமான நறுமணம் வீசும் நல்ல பல சுகாதாரப் பணிகளை மாநகரம் முழுவதும் செய்து வரும் மாநகராட்சி நிர்வாகத்தை பாராட்டி மலர் தூவி வாழ்த்தும் போராட்டம் தோழர் நாகராஜ் மாநகர செயலாளர் தலைமையில்,
பாலு, வடிவேல், செல்வம், மணிகண்டன், சங்கர், தங்கராசு,பிரபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் துரை மாநகராட்சியின் அவல நிலையையும் சுகாதார சீர்கேட்டினை கண்டித்தும், பேருந்து நிலத்தில் சுகாதாரமற்ற இச்சூழ்நிலை தொடர்ந்து ஏற்பட்டால் பொது மக்களை அதிக அளவில் திரட்டி மாநகராட்சியை முற்றுகையிடும் போராட்டம் தொடரும் என எச்சரித்து கண்டன பேருரை ஆற்றினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயராஜ், சுந்தரராஜா, முருகன், பன்னீர்செல்வம், வளர்மதி வாசகி, அரிகிருஷ்ணன், பாக்கியம், ஜெயசீலன், தேவராஜ், உள்ளிட்ட ஏராளமான தொழர்கள் கலந்து கொண்டனர்.