கோவையில் இந்தியர்களின் தேசப்பற்றை கூறும் விதமாக, தமிழக பாரம்பரிய சிலம்பாட்டக் கலையைப் பெருமைப்படுத்தும் வகையில், 220 மாணவர்கள் சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்துள்ளனர்..

வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி மையம் மற்றும் வீரத்தமிழன் மார்ஷியல் ஆர்ட்ஸ் கல்ச்சுரல் பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற சாதனை நிகழ்வு செலக்கரசல் பகுதியில் உள்ள பாரத் நர்சரி பிரைமரி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..

வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி மையத்தின் தலைவர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் பாரத் பள்ளியின் தாளாளர் அமீர் மற்றும் முதல்வர் சுபாஷினி அமீர் ,தொழிலதிபர் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டு சாதனை நிகழ்வை துவக்கி வைத்தனர்…

இதில் ஐந்து வயது முதலான பள்ளி கல்லூரி மாணவர்கள் 220 பேர் கலந்து கொண்டு,
ஐ லவ் இந்தியா மற்றும் சுதந்திரா இந்தியா 79 எனும் வடிவமைப்பில் இணைந்து நின்று 79 நிமிடங்கள் தொடர்ந்து ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பம் சுழற்றி கவனம் ஈர்த்தனர்..

மாணவர்களின் இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது…

இது குறித்து வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கனகராஜ் கூறுகையில்,சுதந்திர இந்தியாவின் பெருமைகளை கூறும் விதமாகவும்,மாணவர்களுக்கு தேசப்பற்று பற்றி கூறும் விதமாக உலக சாதனை நிகழ்வை நடத்தியதாக தெரிவித்தார்..

இதனை தொடர்ந்து உலக சாதனை செய்த மாணவர்கள் நோபல் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..