மதுரை மாட்டுத்தா வணி பஸ் நிலையத்தில் மனநலம் பாதிக்கப் பட்ட சுமார் 32 வயது ஆண் ஒருவர் ஆடைகள் அழுக்கடைந்து, சரியானஉணவின்றி ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிவதாக மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் உடனடி யாக மாநகர காவல் கரங்கள் அமைப்பைச்சேர்ந்த போலீசார் மூலமாக அந்த நபர் மீட்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தேவையான உதவிகளை வழங்கி குடும்பத்தினருடன்
சேர்த்து வைக்கும்படி ஆய்வாளர் ஹேமல தாவுக்கு உத்தரவிடப் பட்டது.
இதையடுத்து மீட்கப்பட்ட வாலிபர் உறவுகள் அமைப்பு மூலம் மதுரை புல்லூத்து பகுதியில் உள்ள அக்க்ஷயா டிரஸ்ட் வசம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலு தவி சிகிச்சை அளிக்கப் பட்டது.
பின்னர் அவரை குளிக்க வைத்து புத்தாடைகள் வழங்கினர். இதன் தொடர்ச்சியாக அந்த நபர் அளித்த தகவலின் பேரில் சோழவந்தானில் உள்ள அவரது சகோத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கு உதவிய நேதாஜி ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஹரி, காவல் கரங்கள் அமைப்பை சேர்ந்த போலீசார் ஆகியோரை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டினார்.
