அரியலூர் கவுண்டர் பண்ணையில் தேமுதிக சார்பில் கேப்டன் பயணியர் நிழற்குடை திறப்பு விழா சிறப்பாக நடந்தது விழாவிற்கு தலைமையேற்று நிழற்குடையை திறந்து வைத்து அரியலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் இராம ஜெயவேல் சிறப்புரையாற்றினார்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பொதுக்குழு உறுப்பினர் கருப்பையா வரவேற்று பேசினார் மாவட்ட பொருளாளர் சக்திவேல் மாவட்ட துணைச் செயலாளர் பாண்டியன் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித் நகர பொருளாளர் ரமேஷ் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது
