காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை மற்றும் ஆசிரியர் தின விழா மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் ஆசிரியர்களை போற்றும் வகையில் மாணவ மாணவிகள் ஆசிரியப் பெருமக்களை வாழ்த்தி வாழ்த்துரைகளையும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினர். மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அத்தப்பூ கோலமிட்டும் நடனமாடியும் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் திரு.பழனிச்சாமி, முதல்வர் சசிகலா, செயலாளர் ராஜேந்திரன், அறங்காவலர்கள் தாரகேஸ்வரி,நிர்வாக அலுவலர் சிவசதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
