வேப்பூர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சாய் அப்போலோ சமுதாய கல்லூரி சார்பில் ஊட்டச்சத்து வார விழா கொண்டாடபட்டது
விழாவிற்கு வேப்பூர் அரசு தலைமை மருத்துவர் அகிலன் தலைமை தாங்கினார். சாய் அப்போலோ கல்லூரி நிர்வாகி டாக்டர் தங்கதுரை முன்னிலை வகித்தார்
நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் திவ்யபாரதி, ஆசிப்கான், பிரசன்னா திவ்யபாரதி உள்ளிட்டோர் பங்கேற்று விழாவில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர், தொடர்ந்து சிறுவர் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் வேப்பூர் சாய் அப்போலோ கல்வி நிறுவனங்களின் விரிவுரையாளர்கள் சிவரஞ்சினி, இந்திரா, திவ்யா, தீபா, சுபாஷினி, மேலாளர் பிரவீன்குமார், மாணவ-மாணவிகள் பலரும் பங்கேற்றனர்
