பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அடுத்து ஆனைமலை மேற்கு ஒன்றியற்குற்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் முப்பெரும் விழா பாரதிய ஜனதாவின் மாநிலதுணைப் பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் முன்னணியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஒன்றிய தலைவர் வனிதா நந்தகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது இவ்விழாவில் துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதியாகியுள்ளது என்று பா.ஜ.க. மாநில துணை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே பா.ஜ.க. சார்பில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
இது அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் என்பதையே காட்டுகிறது. அ.தி.மு.க. தலைமை ஏற்று இருக்கக்கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.அப்துல் கலாம் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் தி.மு.க., காங்கிரஸ் செய்த சதியின் காரணமாக அப்துல் கலாமை தோற்கடித்தனர்.
வருகிற 9ம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் கொங்கு மண்ணைச் சேர்ந்த தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
