11.8.2025-ல் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பானது யாருக்கானது என தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டுமென கோரிக்கை..
கடந்த 1.9.2025 – அன்று உச்சநீதி மன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிக்காலம் உள்ளவர்கள் பணியில் தொடர்வதற்கு இரண்டு ஆண்டு களுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என தீர்ப்பளித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் ஏற்கனவே, கடந்த 11.8.2025 – அன்று ஆசிரியர் தகுதி தேர்விற்கு அறிவித்துள்ள அறிவிப்பானது, 8.9.2025 – அன்று தேர்வாளர்கள் விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள தால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை யில் மேற்கண்ட தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பானது நடப்பாண்டில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பொருந்துமா?
அல்லது புதிதாக பணியில் சேர்வோருக் கானதா? யாருக்கானது? என்பதை தமிழ்நாடு அரசு விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் என மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாவட்டச் செயலாளர் பெ. சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்…
