தூத்துக்குடி மாநில பொதுக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளரும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் பெருமாள்சாமி கதிர்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளை பொது இடங்களில் போடும்படி பலமுறை அறிவுறுத்தப்பட்டது

ஆனால் அதையும் மீறி ஒரே இடத்தில் ஒரு அணியை சேர்ந்தவரின் இடத்தில் கட்சியின் கூட்டத்தை கூட்டுவது சரியல்ல ஆகையால் மாவட்டத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து இந்த கூட்டத்தை புறக்கணிக்கிறோம் பொது இடங்களில் கூட்டம் நடத்துவதற்கு பொருளாதார வசதி இல்லையென்று சொன்னால் அதை நாங்கள் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் எல்லோரும் பிரித்து தர தயாராக இருக்கிறோம் ஆகவே மீண்டும் மீண்டும் கட்சியின் கூட்டங்களை பொது இடங்களில் நடத்தாமல் ஒரு சார்பு அணியில் நடத்துவதை கண்டிக்கிறோம்

இதைப் பற்றி பலமுறை தலைமையிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை வடக்கு மாவட்டத்திலே ஒரு மாவட்ட தலைவர் பதவி போடும்படி வலியுறுத்தப்பட்டது அதற்கும் பதில் இல்லை ஆக கட்சியின் வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபட்டாலும் அதற்கு உறுதுணையாக தலைமை இல்லை ஆகவே நாங்கள் திருநெல்வேலி மாநாட்டை புறக்கணிக்கின்றோம்

இது நாங்கள் சார்ந்த கட்சி பதவி ஆனாலும் சரி ,மாநில பொதுச் செயலாளர் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஆனாலும் சரி ஆக இந்த திருநெல்வேலி மாநாட்டை நாங்கள் புறக்கணிக்கின்றோம் வாழ்க ராகுல் காந்தி வாழ்க காங்கிரஸ் என்றும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படையில் உறுப்பினராக இருப்போம் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளாா்.