புதுச்சேரியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு

பழைய நீதிமன்ற வளாகம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு கிரேன்கள் உதவியோடு விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.