அரியலூர் மாவட்டம் செந்துறை வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் முப்பெரும் விழா சிறப்பாக நடந்தது செந்துறை அருணா பார்வதி திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு சங்கத்தின் தலைவர் பெ சின்னப்பா தலைமை தாங்கினார்
செயலாளர் ராஜவேல் அனைவரையும் வரவேற்று பேசினார் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வையாபுரி பெருமாள்ராஜி முருகேசன் முன்னிலை வகித்தனர் அமைப்பு செயலாளர் இளங்கோவன் ஆண்டு அறிக்கை படித்தார் பொருளாளர் சிதம்பரம் நிதிநிலை அறிக்கை வாசித்தார்
முத்துவேல் தங்கவேல் அரியலூர் மாவட்ட தலைவர் சின்னசாமி பொருளாளர் குடியரசன் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் சங்க நிறுவனர் அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க துணைச் செயலாளர் அரியலூர் நல்லப்பன் ஆகியோர் சங்க தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார்கள்
புலவர் இளங்கோவன் வெற்றி விநாயகா கல்வி நிறுவனங்களின் தலைவர் தாளாளர் திரு சுப்பிரமணியன் மண்டல செயலாளர் மாணிக்கம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் அறிவொளி சுரேஷ் கண்ணன் தலைமையாசிரியர் ராமதாஸ் முனைவர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினார்கள்
2023 ஆம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது பெற்ற புலவர் அய்யன் பெருமாள் அவர்களை பாராட்டி ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து கூறி பாராட்டு தெரிவித்தனர் தொழில் கல்வி ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் அ குப்புசாமி அனைவருக்கும் நன்றி கூறினார் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் 70 வயது நிறைவடைந்தவர்களுக்கு பத்து சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி தரவேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
