பேராவூரணி அக் 24.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே வீரராகவபுரம் கிராமத்தில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் விவசாயிகளிடம் வேளாண் பணி நடந்தது.
வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வீரராகவபுரம் கிராம விவசாயிகளுக்கு விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, விவசாயத்தின் அவசியம், உணவு பாதுகாப்பு சுற்றுச்சூழல் சமநிலை குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
மேலும் கல்வி மற்றும் விவசாயம் இணையும்போது சமூகத்தில் ஏற்படும் நேர்மை மாற்றங்களை நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு, நேர மேலாண்மை, விவசாயிகளுடன் கலந்துரையாடல் என அனைத்து நிலைகளிலும் மாணவிகள் தங்களது செயல் திறனை வெளிப்படுத்தினர். விவசாயிகளுக்கு உலக உணவு தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உணவு உற்பத்தியில் விவசாயிகளின் பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையிலும் மாணவிகள் மேற்கொண்டனர்.
தொடர்ந்து மாணவிகள் விவசாயிகளின் வயல்களில் இறங்கி நாற்று நடவு பணியில் ஈடுபட்டனர்.
கிராம வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டு விவசாயத்தின் எதிர்காலம் குறித்து விழிப்புணர்வை உருவாக்கிய வேளாண்மை கல்லூரி மாணவிகளின் முயற்சியை கல்வியாளர்கள், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாராட்டினர்.
பேராவூரணி நீலகண்டன் .
