அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் கார் ஸ்டாண்ட் பெயர்ப் பலகை திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தலைவர் சின்னத்தம்பி தலைமை தாங்கி, கார் ஸ்டாண்ட் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்களின் போக்குவரத்து வசதியைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கார் ஸ்டாண்டை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *