திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாநகரில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறுசேமிப்புக்கான ரொக்கப்பணம், சீருடைகள், பழங்கள், இனிப்புகள், மிக்சர் உள்ளிட்ட கார வகைகள் மற்றும் பொரிகடலை ஆகியவற்றை வழங்கினார்.

இவ்விழாவில் மாநகரச் செயலாளர் ப. கார்த்திவேல்மாறன், மாநிலப் பிரச்சாரச் செயலாளர் ஏ.ஏ. ஆறுமுகம், மாவட்ட அமைப்பாளர் பவர் அன்பரசு, துணை மேயர் சு. ராஜாங்கம், வழக்கறிஞர் எஸ். கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் டி. நம்பியார், என். சுதாகர், கே. சுரேஷ், சி. அங்கப்பன், சி. முருகன், வி. ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்ட இந்நிகழ்வு விழாக்கோலத்துடன் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *