மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீன்பிடி துறைமுகம் மூலம் 350 விசைப்படகுகள் மற்றும் 600 பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர்

அவர்களுக்கான டீசல் வழங்குவதற்காக பழையார் துறைமுகத்தில் தமிழ்நாடு மீனவர்களுக்கு கழகம் சார்பில் டீசல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பங்கில் வழங்கப்படும் டீசல் சில்லறை விற்பனை நிலையங்களை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீனவர்கள் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வானகிரியில் அமைந்துள்ள மீன்வளத்துறை சில்லறை விற்பனை டீசல் பங்கில் டீசல் எடுத்து பயன்படுத்தி வந்தனர்

இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதால் பழையார் கிராமத்திலேயே மீன்வளத் துறை மூலம் சில்லறை விற்பனை டீசல் பங்க் அமைத்து தரகோரி மீனவர்கள் கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் நடவடிக்கை எடுக்காததால் இன்றுபழையார் மீனவர்கள்ஊர் மறியல் செய்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை மேலும் அவர்கள் கிராம எல்லையில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மீன்வளத்துறை இணை இயக்குனர் ரீனா செல்வி மற்றும் காவல் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வந்தனர் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து மீனவர்கள் மீன்வளத் துறை அதிகாரிகள் வாகனத்தில் ஏறி புறப்பட்டனர் இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் வாகனங்களை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் வாகனத்திலிருந்து இறங்கி பந்தலில் அமர்ந்தனர் அவர்களை வெளியேற விடாமல் இரு பக்கமும் மீனவர்கள் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *