அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உடன் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி, சென்னை காயத்திரி சாரிட்டீஸ் மற்றும் அன்பே சிவம் அறன் பணி குழு இணைந்து N.R.நகர் படுக்கை அணையில் 1000 பனை விதை நடும் பணி தொடங்கப்பட்டது.
அரியாங்குப்பம் கொம்யூன் கமிஷ்னர் விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் மண வெளி சட்டமன்ற உறுப்பினர் இராமு அவர்களும், அகில பாரத சாதுக்கள் கூட்டமைப்பு சுவாமி .சிவசிவ. வெள்ளியங்கிரி ஆகியோர் பனை விதை நடவு தொடங்கி வைத்தனர்.
நிகழ்வில் அன்பே சிவம் அறன் பணி அன்பழகன் அரியாங்குப்பம் கொம்யூன் .நாகராஜி, JE .சுரேஷ். இளநிலை எழுத்தர் செழியன் மற்றும் பூரணாங்குப்பம் பஞ்சாயத்து புருஷோத்தம்மன், தானம்பாளையம் குமரன், ராணி அறக்கட்டளை விஜய், நளசேகரன்,சதீஷ், சந்திரசூட், ஆதிகேசவன், NR.நகர் பகுதி இளைஞர்கள், கௌதம், பிரசாத் உற்பட பலர் பங்குபெற்று பனை விதைகளை ஆற்றுப் படுக்கை அணை ஓரமாக நடவு செய்தனர்.
