தமிழக விவசாயிகள் நிலத்தில் உள்ள பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து, கலப்படம் இல்லாமல் இயற்கையான முறையில் இரக்கும் கள்ளுக்கு உண்டான தடையை தமிழ்நாடு அரசு நீக்க கோரி நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து பலக்கட்ட போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது இதுகுறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியுள்ளது
தமிழக விவசாயிகளின் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இரக்கும் கள்ளுக்கு உண்டான தடையை நீக்க இதுவரையிலும் எந்தவிதமான நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு எடுக்க வில்லை தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளா மாநிலம், பாண்டிச்சேரி,ஆந்திர மாநிலம், கர்நாடகா,தெலுங்கான ஆகிய மாநிலங்களில் கள்ளுக்கு தடையில்லை தமிழகத்தில் மட்டும் தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இரக்கும் கள்ளை கலப்படம் என்று சொல்லி, நோய் பிணியை போக்கும் அரு மருந்தாக உள்ள கள்ளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
நாட்டுக்கு வீட்டுக்கு மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மதுவுக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் கொடுத்து, போதை கலாச்சாரத்தால் இளைய சமுதாயம் சீர்கெட்டு, தமிழகத்தில் பாலியியல் குற்றங்கள் நாள்தோறும் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே உள்ளது.
சங்க காலத்தில் தமிழர்கள் தினந்தோறும் கள்ளை உணவில் ஒரு பகுதியாக பருகி வந்துள்ளது குறித்து வரலாற்று குறிப்பு தெளிவு படுத்துகிறது. கள்ளுக்கு உண்டான தடையை தமிழ்நாடு அரசு நீக்காததை கண்டித்து, தமிழக விவசாயிகள் அவர் அவர் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளு கட்டி, கள்ளு இரக்கி வருகின்ற நவம்பர் 2 ந் தேதி அன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கள்ளு விற்பனை செய்யப்படும் என்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
