சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான ‘யுவற்சவம்’ என்ற தலைப்பில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் M. அனந்த நாராயணன், துணை முதல்வர் முனைவர் R. இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகை ரேகா குமரன் மற்றும் திரைப்பட நடிகர் தமிழ்வேல் ஆகியோர் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர்.

கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் பாவனேஷ் தியோதர் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார். நிகழ்ச்சியில் அனைத்துத் துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவ, மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற ‘யுவற்சவம்’ கலைநிகழ்ச்சி சிறப்பாகவும், இனிதேயும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *