ஈரோடு மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை இந்தியா தினம் மற்றும் காந்தி ஜெயந்தி சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. 15 தமிழ்நாடு பட்டாலியன் NCC, ஈரோடு கீழ் செயல்படும் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (VCET) தேசிய மாணவர் படை மாணவர்கள் திண்டல் அருள்மிகு திண்டல் முருகன் கோவில் வளாகத்தில் தூய்மை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

தேசிய மாணவர் படை மாணவர்கள் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தியதுடன், பொதுமக்களிடையே தூய்மை, சுகாதாரம், சுற்றுப்புறப் பாதுகாப்பு மற்றும் முறையான கழிவுப் பொருள் மேலாண்மை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

மேலும், மாணவர்கள் MyGov இணையதளத்தின் Swachhta Pledge உறுதிமொழியில் பங்கேற்று, தூய்மையான சுற்றுப்புறத்தை உருவாக்குவதற்கும், சமூகத்தில் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உறுதியேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மொத்தம் 40 NCC மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி லெப்டினன்ட் B. தினேஷ்குமார் மற்றும் கேர் டேக்கர் R. பிரதீப் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *