மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்

தென்காசி, அக் – 03

தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து மூத்த குடி மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

​​தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு (சென்னை) 2026–2027ஆம் ஆண்டிற்கான செயல் திட்டத்தின்படி, தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மூத்த குடி மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

​தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.முருகவேல் முன்னிலை யில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் பி.இராஜவேல் வழிகாட்டுதலின் படி இம்முகாம் ஒருங்கிணைக்கப் பட்டது. இதில் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து (01.10.2026) காலை 10.00 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது.

இதில் தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.முத்துலட்சுமி மற்றும்
100 வழக்கறிஞர்கள் 50 நீதித்துறை ஊழியர்கள் சட்டம் சார்ந்த தன்னார்வலர் மற்றும் 20 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *