துறையூர் அக்-02
திருச்சி மாவட்டம் துறையூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தேச தந்தைமகாத்மா காந்தியின் பிறந்த நாளை (அக்டோபர் -02) முன்னிட்டு நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் இராமநாதன் தலைமையில் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த காந்திஜியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் வட்டாரத் தலைவர் மாணிக்கம்,முன்னாள் வட்டார தலைவர்கள் பிரீஸ் சரவணன், அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்கம் செந்தில், மீசை பாண்டியன், புகழேந்தி, மாவட்ட துணை தலைவர் டி வி கண்ணன், சதீஷ், செல்வராஜ், ராமகிருஷ்ணன், கண்ணன், பெரியசாமி, குருசாமி, குமார், திருமுருகன், சேகர், செல்வி ஜான்விஸ்ரீ மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *