புதுச்சேரி மாநிலம் காரைக்கால்: மோசமான வானிலை மற்றும் பேரிடர் காலங்களில் விளம்பர பலகைகள் மற்றும் வளைவுகள் மூலம் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால், காரைக்கால் நகராட்சி பகுதியில் விளம்பர பலகைகள், வளைவுகள் மற்றும் தற்காலிக காட்சிப் பொருட்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் உத்தரவின்படி, எந்தவொரு தனிநபரோ, அரசியல் கட்சிகளோ, நிறுவனங்களோ அல்லது அரசு அமைப்புகளோ, பொது அல்லது தனியார் இடங்கள், சாலையோரங்கள் மற்றும் சாலைப் பிரிப்பான்களில் விளம்பர பலகைகள், வளைவுகள் உள்ளிட்ட எந்தவிதமான தற்காலிக காட்சிப் பொருட்களையும் அமைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், காரைக்கால் நகராட்சி பகுதியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்கள், கட்அவுட்கள், விளம்பரப் பலகைகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் உடனடியாக அகற்றப்பட உள்ளன.

எனவே, அனைத்து தரப்பினரும் நகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *