கூத்தாநல்லூர்., செப்.29.-

உலக இருதய தினத்தை முன்னிட்டு கூத்தாநல்லூரில் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை முன்பிருந்து தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று பாய்க்கார தெருவில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் இருதய நோய் தடுப்பு மற்றும் இருதய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, முறையான உணவு முறையை பின்பற்றுவது, உடற்பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் இருதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள் இம்தியாஸ் அகமது, உஸ்மான் கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *