நடுக்கல்லூர்: நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் NSS மற்றும் மை பாரத் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் தவசுமுத்து, PTA தலைவர் கல்லூர் வேலாயுதம், உடற்கல்வி ஆசிரியர் (PET) டாக்டர் வி. பெரியதுரை, முதுகலை ஆசிரியர் பொன்னுச்சாமி, மை பாரத் அலுவலர் ஞானசந்திரன், NSS DLO பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி NSS பொறுப்பாளர் குமார் மற்றும் மை பாரத் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *