திருவெற்றியூர் செப் 26 காங்கிரஸ் கட்சி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக முழுவதும் மாவட்ட வாரியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய பேச்சு போட்டி நடத்தி வருகின்றனர் மாவட்டங்களில் சிறப்பாக பேசும் ஐந்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் முதலிடம் வரும் மாணவருக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது

இறுதிச்சுற்று பேச்சுப்போட்டி சத்தியமூர்த்தி பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆரம்ப கட்ட தேர்வு திருவொற்றியூரில் நடைபெற்றது அரசு பள்ளி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் பேச்சுப் போட்டியை மாவட்ட தலைவர் மதாரம்மா கனி பாரூக் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் தீர்த்தி,சுரேஷ் , ஜோதி ராமலிங்கம் விமல் தாஸ் டிவி துரைராஜ் ஜோதி பிரகாஷ் பொன்னுரங்கம் கலையரசன் நாகராஜ் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *