நாகப்பட்டினம்,செப்.25-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. விவசாயிகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப தண்ணீர் வழங்கும் நடவடிக்கையாக ஆறுகளில் தண்ணீர் இருப்பு குறித்து நீர்வளத்துறை நன்னிலம் காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அன்பானந்தம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில் குத்தாலம் தெற்கு புத்தாறு இயக்கு அணை, திட்டச்சேரி வடக்கு புத்தாறு இயக்கு அணை, அரசலாறு அம்பல் இயக்கு அணை, திருப்பயத்தங்குடி, மருங்கூர், நெய்குப்பை, கீழப்பூதனூர் இயக்கு அணைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருமருகல் உதவி பொறியாளர் செல்வகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *