தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் மூலம் வாக்களிக்கும் பணி தொடங்கியது.

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 1,236 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர். இதில் 244 மாற்றுத்திறனாளிகளும், 85 வயதுக்கு மேற்பட்ட 944 மூத்த குடிமக்களும் அடங்குவர்.

தேர்தல் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி தபால் வாக்குகளைப் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு நேரில் வராமல் தங்களது வாக்குகளைச் செலுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *