கோவையில் பெண்களின் உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், யாக்னா குழுமத்தின் பினாக்கிள் சார்பில் ‘பிரைடு அச்சீவர்ஸ்’ விருது வழங்கும் விழா சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

பெண்களின் தன்னம்பிக்கை முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில், விருதுகளுக்கான பதிவு மற்றும் விருது வழங்குவதற்கு எவ்வித கட்டணமும் பெறாமல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருவதாக யாக்னா குழும நிறுவனர் கவுதம் பாலசுப்ரமணியம் மற்றும் பினாக்கிள் பிரைடு அச்சீவர்ஸ் தலைவர் ரெஹானா தெரிவித்தனர்.

விழாவில் முதல் தலைமுறை பெண் தொழில் முனைவோர், குழுவாக இணைந்து சாதித்த பெண் தொழில் முனைவோர், தனியாக சாதித்து வரும் பெண்கள் என 3 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மணிமேகலை மோகன், விருதுகளை வழங்கி சாதனையாளர்களை கௌரவித்தார்.

விழாவில், விருது பெற்ற பெண்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தங்களது சாதனையை கொண்டாடும் வகையிலும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து, அவர்களின் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் கொண்டாடும் வகையில் ‘பிரைடு அச்சீவர்ஸ்’ விழா அமைந்தது குறிப்பிடதக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *