தமிழ்நாடு மனை தொழில் செய்வோர் நல சங்கத்தின் கோவை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை இரத்தினபுரி பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது..

தமிழ்நாடு மனை தொழில் செய்வோர் நல சங்கத்தின் மாநில தலைவர் ராக்கி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில்,மாநில செயல் தலைவர் டாக்டர் ஜி. முகமது ரபீக், மாநில பொருளாளர் மயிலை செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
மாநில பொதுச் செயலாளர் ராம வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்..

நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார்,மற்றும் தமிழ்நாடு மனை தொழில் செய்வோர் நல சங்கத்தின் ஆலோசகர்கள் விருகை கண.தன், ஏர்போர்ட் ராஜேந்திரன்,,மெடிக்கல் நாராயணன்,லயன் அருள்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகபடுத்தி பேசினார்…

விழாவின் ஒரு பகுதியாக காவேரி குழுமங்களின் புதிய பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டார் ஷிப் எனும் வாட்டர் டேங்கை அமைச்சர் சம்பத் குமார் அறிமுகம் செய்து வைத்தார்..

இந்நிகழ்ச்சியில் காவேரி குழுமங்களின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் உடனிருந்தார்..தொடர்ந்து கோவை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள், தலைவராக கருப்பு சாமி, மாவட்ட செயலாளராக கோவை கதிர்வேல் மாவட்ட பொருளாளராக ஆத்மா சம்பத் மாவட்ட அமைப்பு செயலாளராக அழகப்பன் மற்றும் ராமச்சந்திரன் கார்த்திக் ஜோதிமணி உமர்சா மாடசாமி சுந்தரம் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் இணைச் செயலாளர்களாக ஸ்ரீ சக்திவேல் ராஜா பட்டாசு பாலு , சீனிவாசன் கார்த்திகேயன் ரமேஷ் வசந்த் ஆகியோரும், துணை செயலாளர்களாக கணேஷ்குமார் சுக்கூர் பாய் , முத்து , பாலமுருகன் பிரகாஷ் கோபிநாத்,. கவியரசன் ,அருண்குமார் முருக வேணி வீரலட்சுமி மாசிலாமணி கற்பகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..

தொடர்ந்து நடைபெற்ற ககூட்டத்தில், மனை தொழில் நலன் பாதுகாப்பு கருதி ரேரா,மனை வரன் முறை போன்ற வருவாய்த்துறை விதிகளை முறையாக பின்பற்ற வழிகாட்டுதல்.முறையாக பத்திர பதிவு செய்து அரசு வருவாயை அதிகரிப்பது,அரசுக்கும் தொழில் செய்வோருக்கும் பாலமாக செயல்படுதல்.
நேர்மையான வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட மனைகளை மட்டுமே விற்பனை செய்வது,மரம் நடுவது,சுற்றுச்சூழல் நலன்,உள்ளிட்ட ,சமூக பணிகளில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *