கூத்தாநல்லூர்.,
அமைதி, கருணை மற்றும் மனிதநேய போதனைகளை பரப்பிய நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் மிலாடி நபி திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் தர்காக்களில் சிறப்புத் தொழுகைகளும் குர்ஆன் ஓதும் நிகழ்ச்சிகளும் நபிகள் நாயகத்தின் புகழ் பாடும் பேரணிகளும் மவுலூது பாடல்களும் நடைபெற்று வருகிறது .
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்களால் இளைஞர்கள் சீரழியும் நிலை உருவாகி வருகிறது . இதனை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் மிலாது நபி திருநாளை முன்னிட்டு போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .
இந்தப் பேரணியில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பி பேரணி நடைபெற்றது . முன்னதாக இந்த பேரணி பொதக்குடியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பெரிய பள்ளிவாசல் முன்பு முடிவுற்றது ஏராளமான மாணவ மாணவியர்கள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர் .
