மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட முதன்மையான சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் 27வது குரு மகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார்.

இவ்வாண்டு தருமபுரம் ஆதீனத்தின் 26 ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் நூற்றாண்டு விழா நடந்து வருகிறது அதன் ஒரு பகுதியாக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் குருஞானசம்பந்தர் மிஷன் முத்தையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் பேரூராட்சி இணைந்து நூற்றாண்டு விழா 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகளை நட்டனர்